ஸ்ரீகோவிந்தராஜ ஸ்வாமி கோயில்: இங்கு எழுந்தளியுள்ள மூல மூர்த்தி வைணவத்திலகமான ஸ்ரீராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு உள்ள மூலவர் கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீபார்த்தசாரதி மற்றும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமியும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளனர்.
போன்: 0877-2264592. ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில்: இக்கோயில் திருப்பதி இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்ரீராமர் லக்ஷ்மணர் மற்றும் சீதை இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது திருப்பதிக்கு வந்ததின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.
போன்: 0877-2264584.
ஸ்ரீகபிலேஸ்வர ஸ்வாமி கோயில்: இங்கு அமைந்திருக்கும் சிவன் கோயில் திருப்பதி நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கபிலமஹரிஷியால் இங்குள்ள சிவலிங்கம் தோற்றுவிக்கப்பட்டதால் இந்த மூலவருக்கு கபிலேஸ்வரர் என்று பெயர் வந்தது. இங்கு உள்ள தீர்த்தமும் கபிலதீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
போன்: 0877-2264587.
அலர்மேல்மங்காபுரம் (திருச்சானூர்): இது திருப்பதிக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் பழமை வாய்ந்த புனிதத் திருத்தலமாகும். திருவேங்கடவனின் தேவியான ஸ்ரீபத்மாவதி தாயார் மூலவராக இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.