மயூர் விஹார் கணபதி கோயிலில் ஆடிப் பூர சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2014 03:07
மயூர் விஹார் 2ஆவது ஃபேஸில் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.இந்த விழாவையொட்டி உலக நன்மைக்காக கோயிலில் லலிதா சகஸ்ரநாம ஹோமம், ஜெப ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு பாலாம்பிகா அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கை, வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.