துவரிமான்:துவரிமான் சக்திமாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவத்தையொட்டி, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நடந்தது.கோயில் முன்பு புனிதநீர் நிரப்பிய குடங்களை யாகசாலையில் வைத்து துர்காசக்தி ஹோமபூஜையை ராஜாபட்டர் நடத்தினார். பின் விழா கமிட்டி நிர்வாகிகள் குடங்களை சுமந்து வர, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.பின் கோயிலுக்கு உற்சவ மூர்த்தியான ஐம்பொன் அம்மன் விக்ரத்திற்கு ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் தீபாராதனை காட்டி, பிரதிஷ்டை செய்தார். விழா கமிட்டி நிர்வாகி நாகலிங்கம், ஊராட்சி தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் ஆதிமூலம், முன்னாள் தலைவர் கண்ணன், சுந்தர் பங்கேற்றனர்.