பதிவு செய்த நாள்
04
ஆக
2014
11:08
திருச்சி
:காவிரியில், புது வெள்ளமாக வந்த தண்ணீரில், காவிரிக் கரையோர மக்கள், புனித
நீராடி, ஆடிப்பெருக்கு விழாவை, நேற்று உற்சாகமாக
கொண்டாடினர்.மேட்டூரிலிருந்து, ஆடிப்பெருக்கு விழாவுக்காக, தண்ணீர்
திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில், புது வெள்ளம்
பெருக்கெடுத்துள்ளது.அதனால், காவிரிக் கரையோர மக்கள், கோலாகலமாக, நேற்று
ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். காவிரி கரையோரத்தில் வசிக்கும் பெண்கள்,
குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்குச் சென்று, தலை வாழை இலை விரித்து, அதில்,
மஞ்சள் கயிறு, பழங்கள், காதோலை கருகமணி, காப்பரிசி, பொங்கல் போன்றவற்றை
படையலிட்டு, புது வெள்ளத்தை வரவேற்று, தீபமேற்றி வழிபட்டனர்.ஸ்ரீரங்கம்
அம்மா மண்டபம் படித்துறையில், அதிகளவில் பொதுமக்கள் குவிந்து புனித
நீராடினர். புதுமணத்தம்பதியர் ஆற்றில் புனித நீராடி, திருமண நிச்சயதார்த்த
மாலையை ஆற்றில் விட்டு, தாலி பிரித்து அணிந்து கொண்டனர். இதையொட்டி, காவிரி
கரையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.திருச்சி மாவட்டத்தில்,
தொட்டியம், முசிறி, குணசீலம், திருப்பராய்துறை, முக்கொம்பு போன்ற
பகுதிகளிலும், திரளான பெண்கள், குடும்பத்துடன் வந்து, ஆடிப்பெருக்கை
கொண்டாடினர்.ராமேஸ்வரம்: நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளி
மாவட்டத்தில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள், புதுமண தம்பதிகள் வருகை
தந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கடற்கரையில் தீபம்
ஏற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜித்து, திருமாங்கல்ய கயிறுகளை
புதுப்பித்தனர். பின், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, சுவாமி
தரிசனம் செய்தனர்.