காளையார்கோவில் : காளையார்கோவில் தெற்குதெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு கரகம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை தெற்குத் தெரு கிராம மக்கள் செய்திருந்தனர்.