பாலமலை ரங்கநாதர் கோவிலில் வேள்வி யாகம் இன்று நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2025 10:10
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் சித்தர் வேள்வியாகத்தின், 48வது நாள் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே ராமானுஜர் வருகை தந்த சிறப்பு பெற்ற பாலமலை ரங்கநாதர் கோவிலில், 48 நாட்கள் சித்தர் வேள்வி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் நிறைவு விழா இன்று மாலை, 5:00 மணிக்கு சகசரகலச யாகம், பூர்ணாகதி சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நாளை வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு, 1008 கலச அபிஷேக ஆராதனை நடக்கிறது. இத்தகவலை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தெரிவித்தார்.