பதிவு செய்த நாள்
07
ஆக
2014
10:08
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். இதையொட்டி, நேற்று கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் 17ம் நாள் விழாயொட்டி, நேற்று காலை, கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகி, தெற்கு, மேற்கு ரதவீதி, திட்டகுடி வழியாக கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாரதனை நடத்தினர். அதன்பின், சுவாமி, அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். சுவாமி, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியில் வீதிகளில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இதையொட்டி, நேற்று காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜை முடிந்தவுடன், மீண்டும் நடை சாத்தப்பட்டது.
தொடர்புடைய கோயில்கள் :