வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2014 12:08
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் ஆவணித்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கான கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொடிப்பட்ட வீதியுலா, ரதவீதி, மாட வீதிகள் வழியாக வந்து காலை 5.40 மணிக்கு கடக லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடந்தது. வேலாண்டி ஓதுவார் திருமுறை பராயணம் பாடினார். மாலை அம்மன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 10 ம் நாளான ஆக., 14 ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. கோயில் திருவிழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.