பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது பொற்கோவில் தான். பழமை, புதுமை இணைந்த இக்கோயில் காண்போரை கவரும் விதத்தில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
சீக்கியர்களின் புனிதமான இக்கோயில், குருநானக் 1502 ல் இன்ர்ஹ் மண்ணில் பாதம் பதித்த இடத்தில் கட்டப்பட்டது. சீக்கிய நான்காவது குருவாகிய ராம்தாஸ், அமிர்தசரசில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். மன்னர் அக்பரால் இப்பகுதி மானியமாக ராமதாசுக்கு அளிக்கப்பட்டது. 1577ல், குரு ராமதாஸ் இங்கு ஒரு குளம் வெட்டினார். அதைச் சுற்றி ராம்தாஸ்பூர் என்ற நகரம் எழுப்பப்பட்டது. இவரின் கடைசி மகனும், 5வது குருவுமான அர்ஜுன்தேவ், குளத்தின் நடுவில் ஹர்மந்திர் சாஹிப் என்னும் பொற்கோயிலைக் கட்டினார். இதற்கு அடிக்கல் நாட்டியவர் மியான் மிர் என்னும் முஸ்லிம் பெரியவர். இங்குள்ள குளம் அம்ரித் சர். இதற்கு அமிர்தம் தாங்கிய குளம் என்பது பொருள். இந்தக்குளத்தின் பெயரே ஊரின் பெயராக வழங்கப்படுகிறது. சீக்கியகுருமார்கள் செல்வாக்கு பெறுவதை விரும்பாமல், ராமதாஸ் கொல்லப்பட்டார். பின், அவரது மகன் ஹர்கோபிந்த் மடாதிபதியானார். இவரே கோயிலுக்கு எதிரிலுள்ள அகல் தக்த் என்ற கட்டிடத்தை கட்டினார்.18ம் நூற்றாண்டில் ஆப்கானியர்கள் பல முறை குருத்வாராவை தாக்கினர். 1764ல், மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 1802 ல் ராஜ ரஞ்சித்சிங் என்பவர் இக்கோயிலை தங்கத்தால் அலங்கரித்து, பொற்கோயில் என பெயரிட்டார்.