புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது. முருங்கப்பாக்கத்தில் சந்துவெளி மாரியம்மன் ÷ காவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 74ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்தது. நேற்று செடல் திருவிழா நடந்தது. மதியம் 12.௦௦ மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4.௦௦ மணிக்கு செடல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு 7.௦௦ மணிக்கு இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.