பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
அவலூர்பேட்டை: வளத்தி காளி அம்மன் கோவிலில் உள்ள நவகிரக சுவாமிகள் சமேதரராய் அமைந்துள்ளனர். மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தியில் மேல்மலையனூர் செல்லும் சாலை அருகில் பழமையான காளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு சூரியன், சுக்கிரன், புதன், குரு, கேது, சனி, ராகு, அங்காரகன், சந்திரன் ஆகிய நவகிரக பகவான்களின் சிலைகள் சமேதரராய் காட்சி தருகின்றனர். இவர்களை தரிசிக்க வெளியூர் பக்தர்கள் பலரும் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகளவில் வருகை தருகின்றனர்.