சேலம்: ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகையொட்டி, திருத்தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், தேரில் எழுந்தருளினார். பக்தர்கள், தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில், போலீஸார் ஈடுபட்டனர்.