பதிவு செய்த நாள்
11
ஆக
2014
12:08
ஊட்டி : ஊட்டியில் நடந்த ஆடிப்பூர ஊர்வலத்தில், 1,000க்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில் நேற்று, ஆடிப்பூர விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு, சேரிங்கிராசில் உள்ள வழிபாட்டு மன்றத்தில், இயக்கத்தின் மாவட்ட தலைவர் இந்திராணி கொடியேற்றினார். பின், பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பாறை முனீஸ்வரர் கோவில் முன், கஞ்சி கலய ஊர்வலம் துவங்கியது. அ.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் லட்சுமணன் துவக்கி வைத்தார். மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி தலைமை வகித்தார். 1,000க்கணக்கான பக்தர்கள், கஞ்சி கலய ஊர்வலத்தில் பங்கேற்றனர்.பஸ் ஸ்டாண்ட், லோயர் பஜார், கமர்ஷியல் சாலை வழியாக சேரிங்கிராசில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மையத்தை ஊர்வலம் சென்றடைந்தது. பின், நஞ்சநாடு, கேத்தி உட்பட இடங்களில் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை படுகர் கலாசார மைய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மஞ்சை மோகன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க துணைத் தலைவர் மணிபாலன், இணை செயலர் பத்மநாபன், மாவட்ட செயலர் குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.