பதிவு செய்த நாள்
11
ஆக
2014
12:08
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ’நம் கோவில்’ திட்டம் நிகழ்ச்சி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள, 52 ஆயிரம் கோவில்களில் நேற்று நடைபெற்றது. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், விளக்கு எரிய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்து தர்ம பரிக் ஷத் மற்றும் ஆந்திர அறநிலையத் துறை போன்றவை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஆடி மாத பவுர்ணமி அன்று, ’நம் கோவில்’ என்ற திட்டத்தை துவக்கின.முதல்கட்டமாக, 17 ஆயிரம் கோவில்களில் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, நேற்று, ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள, 52 ஆயிரம் கோவில்களில் நடத்தப்பட்டது. கோவில்களுக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களையும், தேவஸ்தானம், ஒரு வாரத்திற்கு முன்னரே, அனைத்து அனுப்பி வைத்தது.பின், நேற்று, அனைத்து கோவில்களிலும் கோ பூஜை, குங்குமார்ச்சனை, விளக்குபூஜை, சத்திய நாராயண விரதம் நடத்தி, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.பின், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராம நாமம் எழுதினர். இரண்டாம் கட்டமாக, கார்த்திகை மாத பவுர்ணமி அன்று நடக்கும், நம் கோவில் திட்டம் நிகழ்ச்சியை, ஆந்திராவின் அண்டை மாநிலங்களான, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கோவில்களிலும் நடத்த, திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய கோயில்கள் :