பதிவு செய்த நாள்
11
ஆக
2014
02:08
வெள்ளவேடு : இருளபாளையத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், நாளை (12ம் தேதி) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. வெள்ளவேடு அடுத்த, இருளபாளையம் கிராமத்தில் கங்கையம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா, நாளை (12ம் தேதி), மாலை 6:00 மணிக்கு, நடைபெறும்.முன்னதாக, கடந்த 1ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. கடந்த 3ம் தேதி, கங்கையம்மன், மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கங்கையம்மன் உற்சவ ஊர்வலமும் நடந்தது. கங்கையம்மனுக்கு கரகாட்டமும், உற்வச ஊர்வலமும் நடந்தது. பின், தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நாளை (12ம் தேதி) காலை 10:30 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், காலை 11:00 மணிக்கு பொங்கல் வைத்தலும் நடைபெறும். மதியம் 1:00 மணிக்கு தீ மேடையில் தீ ஏற்றுதல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும். இரவு, கங்கையம்மன் திருவீதி உலா நடைபெறும்.14ம் தேதி காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.