பதிவு செய்த நாள்
11
ஆக
2014
02:08
திருவொற்றியூர் : திருவொற்றியூர், பட்டினத்தார் கோவிலில் குருபூஜை விழா நடந்தது. திருவொற்றியூரில், பட்டினத்தார் சமாதி உள்ளது. ஆடி மாதம், உத்திராடம் நட்சத்திரத்தில் பட்டினத்தார், முக்தி அடைந்ததாக ஐதீகம். அதையொட்டி நேற்று முன்தினம், அவரது சமாதியில், இந்த ஆண்டு, குருபூஜை விழா, நடந்தது.இதையொட்டி, சமாதி லிங்கத்திற்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்ப பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.ஐம்பொன்னாலான இரண்டடி உயரமுள்ள உற்சவர், வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு, வீதியுலா நடந்தது.பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவுநிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.