பதிவு செய்த நாள்
12
ஆக
2014
11:08
சாத்தாங்காடு: சொர்ணாம்பிகை சமேத தனகோட்டீஸ்வரர் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவொற்றியூர் மேற்கு, கார்கில் நகர் வெற்றி நகரில் உள்ள, சொர்ணாம்பிகை சமேத தனகோட்டீஸ் வரர் கோவிலில், பத்தாம் ஆண்டு ஆடிமாத திருவிழா நடந்தது. இதையொட்டி பால்குடம், அக்னி சட்டி, கூழ்வார்த்தல், தீ மிதி திருவிழா, அன்னதானம் என, ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. கடந்த 7ம் தேதி, வடிவுடைய ம்மன் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பிரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி, தாய் வீட்டு சீதனம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 9ம் தேதி, அம்மன் திருவீதி உலா மற்றும் அக்னி சட்டி ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலம் நடந் தது. நேற்று முன்தினம் பக்தர்கள் மதியம், பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில் நடந்த, தீ மிதி திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.