கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் உள்ள சங்கிலி சுவாமிகள் கோவிலில் நேற்று முன் தினம் லட்ச தீப திரு விழா நடந்தது. மாலை 6 .05 மணிக்கு முதல் தீபம் ஏற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் ராஜசேகரன்கலந்து கொண்டார். புதுச்சேரி அப்பா பைத்தியசாமி சிஷ்யர் ராமசாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சாந்தி ஆசிரம நல்லுசாமி, தளவாய்பட்டி ஆன்மிக ஜோதிடர் ராதா, ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி ராஜேந்திரன், தாவடிபட்டு ஊராட்சி தலைவர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றினர். பக்தர்கள் தீபங்களை ஏற்றி 250 ஆண்டுக ளாக அணையாமல் உள்ள அக்னி குண்டத்தை கொண்டு வழிபட்டுசென்றனர். புதுச்சேரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.