ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2014 11:08
விருத்தாசலம்: ஆடி பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விநாயகர், ஜெகமுத்து மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு திரவுபதி அம்மன் அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.