ரிஷிவந்தியம்: மையனூர் கிராமத்தில் உள்ள கருடமலை மேற்புறத்தில் கட்டியுள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது. ரிஷிவந்தியம் ஒன்றியம் மையனுõர் கிராமத்தில் உள்ள கருடமலையின் மீது 3000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சுவர்கள் மற்றும் சுவாமி சிலைகள் சிதிலமடைந்ததால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாசி மகம் அன்று 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆதிதிருவரங்க கோவிலில் உள்ள பெருமாள் சிலையை இங்குள்ள கருடாழ்வார் தீர்த்தத்தில் அமர்த்தி தீர்த்தவாரி விழா நடக்கும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது.