பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
ஊத்துக்கோட்டை: எல்லையம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 250 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சூளைமேனி கிராமத்தில் உள்ளது எல்லையம்மன் கோவில். கடந்த 1ம் தேதி, இங்கு, 11 நாட்கள் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள், அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. பின், ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சந்தன காப்பு, குங்கும காப்பு, மஞ்சள் காப்பு, கூழ் ஊற்றுதல், பால்குடம் எடுத்தல், அம்மன் திருவீதி உலா என, விழாக்கோலம் பூண்டது. விழாவின் இறுதி நாளான, நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. இதில், 250 பேர் காப்பு கட்டி தீமிதித்தனர். நேற்று காலை, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல், தாராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், திரவுபதி அம்மன் வீதிஉலா, அர்ச்சுனன் தபசு, பக்காசூரன் வதம், அரக்குமா கோட்டை, தர்மர் – கிருஷ்ணன் சந்திப்பு, மாடுபிடி சண்டை ஆகியவை நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, தீமிதி திருவிழா நடந்தது. இதில், 151 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.திருத்தணி மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் ÷ காவிலில், 30 ஆண்டுகளுக்கு பின் நடந்த முதலாம் ஆண்டு தீமிதி திருவிழாவில், 1,000 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி ஒன்றியம், மு ருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில், நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கலால், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக தீமிதி திருவிழா நடத்த முடியாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, கிராமவாசிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஒன்று கூடி தீர்மானித்து, இந் தாண்டு முதல், தீமிதி திருவிழா நடத்துவது என, முடிவு செய்து, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் நிறைவு நாளான, நேற்று, காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, பக்தர்கள் உடலில் அலகு குத்தி, உற்சவர் அம்மனை டிராக்டரில் இழுத்து ஊர்வலமாக சென்றனர். மாலை, 6:30 மணிக்கு 1,000 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீமிதி திருவிழாவில் முருக்கம்பட்டு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் பாண்டூர் பாசூரம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு, தீ மிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தி ருவள்ளூர் அடுத்த, பாண்டூர் கிராமத்தில், பாசூரம்மன் கோவில், அமைந்து உள்ளது. இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு, தீ மிதி திருவிழா, கடந்த, 6ம் தேதி, காப்பு கட்டி, பந்தக்கால் நட்டு, துவங்கியது. 7ம் தேதி, கரகம் எடுத்து, திருவீதி உலாவும், 8ம் தேதி, பால்குட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம், மாலை 6:00 அளவில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர்.
தொடர்புடைய கோயில்கள் :