கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வீட்டில் சுபநிகழ்ச்சி!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2014 04:08
பணிவும் பண்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
சூரியன் 12-ம் இடமான சிம்மத்தில் பிரவேசிக்கும் காலம் ஆவணி. ராசி நாதன் புதனும் அவருடன் இருக்க மாதம் பிறக்கிறது. இதனால் நன்மை ஏற்படாவிட்டாலும், அவரின் பார்வை பலத்தால் பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதனின் பார்வையால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதன் ஆக. 26ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவரால் வீட்டில் பிரச்னை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். சுக்கிரன் ராசிக்கு 11ல் இருப்பதால் பண வரவு கூடும். சொந்த பந்தம் வருகை தருவர். அவர் செப். 1ல் இடம் மாறி 12-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். அங்கு அவரால் காரியத் தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். செவ்வாய் 2ல் இருப்பதால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அவர் செப்.1ல் இடம் மாறி 3-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். மனதில் பக்தி அதிகரிக்கும். இந்த மாதம் குருவின் பலத்தால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். செப். 1 க்கு பிறகு வீண் விரயம் இருக்காது. வளர்ச்சிநோக்கில் செயல்பட்டு வருவீர்கள்.
பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். செப். 1 க்கு பிறகு கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த பாராட்டும் கிடைக்கும்.
அரசியல் வாதிகள் பொதுநல சேவகர்கள் நல்ல பெயர் எடுப்பர்.
புதிய பதவி கிடைக்கும் மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், சோளம் பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். செப்டம்பர் 1க்குப் பிறகு புதிய சொத்து வாங்க காலம் கனிந்து வரும்
பெண்கள் குடும்பத்தில் முன்னிலைபடுத்தப்படுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.
நல்ல நாள்: ஆக. 20,21,22,23,24,28,29 செப். 1,2,3,8,9,10,11
கவன நாள்: ஆக. 17, செப். 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள், வெள்ளை
வழிபாடு: செவ்வாய், சுக்கிரனை வழிபாடு செய்யுங்கள். விநாயகர், துர்க்கை வழிபாடும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். வயதான முதாட்டிகளுக்கு உதவுங்கள்.