விழுப்புரம்,:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத் தில் நாளை (17ம்தேதி) ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் நடக்கிறது.விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் வரும் 17ம் தேதி காலை 10:30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், 11:00 மணிக்கு பால் அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.முன்னதாக, காலை 9:00 மணிக்கு திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து கஞ்சி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் ஜெயபாலன் செய்து வருகிறார்.