பதிவு செய்த நாள்
16
ஆக
2014
01:08
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு, 18 ஆயிரம் வளையல் சாத்துப்படி நிகழ்ச்சி நடந்தது.சேலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், ஸ்வர்ணாம்பிக்கை தாயார் சன்னதி உள்ளது. இங்கு, கடந்த, நான்கு வாரத்தில், வெள்ளிக்கிழமைகளில், லலிதா த்திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆடி ஐந்தாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று மாலை, தாயார் சன்னதி முன், பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு, நவசக்தி அர்ச்சனை விழா நடந்தது. 16 வகையான உபச்சாரத்துடன், வேதமந்திரங்கள் ஒலிக்க, ஒன்பது சிவாச்சாரியார்கள், வழிபாடு நடத்தினர்.பின்னர், 18 ஆயிரம் வளையல்கள், அம்மனுக்கு சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும், 15 சன்னதியில், ஸ்வாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியும் நடந்தது. விழா நிறைவில், அம்மனுக்கு சாத்தப்பட்ட
வளையல்கள், பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, கட்டளைதாரர்
ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் மாரிமுத்து, தலைமை எழுத்தர் சண்முகமூர்த்தி, அர்ச்சகர் ஜெய்சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.