பதிவு செய்த நாள்
19
ஆக
2014
12:08
கம்மாபுரம்: கம்மாபுரம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது. கம்மாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓட்டுக் கட்டடத்தில் மகா மாரியம்மன் கோவில் இருந்தது. கட்டடம் பழுதானதை தொடர்ந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ராஜகோபுரம் கட்டுமான பணி, அறங்காவலர் ராமசாமி தலைமையில் நடந்து வருகிறது. அதில், விநாயகர், முருகர், மகாமாரியம்மன், காத்தவராயன் மற்றும் பரிவார தேவதைகள் நிர்மாணிக்கப்பட்டு, திருப்பணிகள் நடக்கிறது. வரும் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, நேற்று 17ம் தேதி காலை 8:00 மணியளவில் கணபதி பூஜை, காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தன. வரும் 29ம் தேதி இரவு 7:30 மணியளவில் அனுக்ஞை, விக்ஜேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, 30ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 11:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, நாடிசந்தானம், காலை 8:15 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு அம்மன், காத்தவராயன் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.