பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பரப்பிரம்ம சற்குரு சித்தர் சுவாமிகளின் 51வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு 60 இலை படையல் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் ராம அனுமார் கோவிலில் நேற்று பரப்பிரம்ம சற்குரு சித்தர் சுவாமிகளின் 51வது ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு 60 இலை படையல் விழா நடந்தது. அதையொட்டி பட்டாபிஷேக சீதா ராமர், ராம அனுமார், ராமானுஜருக்கு சிறப்பு அபி÷ ஷகம் ஆராதனை நடந்தது. பரப்பிரம்ம சற்குரு சித்தர் சுவாமியின் உருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகளை ஓங்காரநந்தா சுவாமிகள் செய்தார். படைக்கப்பட்ட 60 இலை படையல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், வழக்கறிஞர் நாராயணசாமி, ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ், விவசாய சங்கத் தலைவர் விஜயகுமார், உத்திராபதி, தேசிங்கு உட்பட பலர் பங்கேற்றனர். செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.