திருஆவினன்குடி கும்பாபிஷேக விழா முகூர்த்தகால் நாட்டுதலுடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2014 05:08
பழநி: முருகனின் மூன்றாம்படைவீடான திருஆவினன்குடி கோயிலில் யாகசாலைக்கு முகூர்த்தகால் நாட்டுதலுடன், மகா கும்பாபிஷேக விழா பணிகள் தொடங்கின. கடந்த 1998 ல் திருஆவினன்குடிகோயிலில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 2012 ஜூலையில் இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் ரூ.90 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து செப்., 7 ல் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு மயில்மண்டபம் மற்றும் கிழக்கு வெளிப்பிரகாரத்தில் யாகசாலைகள் அமைப்பதற்காக முகூர்த்தக் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். யாகசாலைகள் ஆகமவிதிகளின்படி அமைக்கப்பட்டு, செப்., 4 ல் கணபதிஹோமத்துடன் கும்பாபிஷேக வேள்வி பூஜைகள் துவங்கவுள்ளன. செப்.,7 மகாகும்பிஷேகவிழாவில், ராஜகோபுரம், உபகோயில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் மற்றும் உதவி ஆணையர் மேனகா செய்கின்றனர்.