திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கூரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2014 11:08
காரைக்கால் : திருநள்ளார் சனி பகவான் கோவில் ராஜகோபுர நுழைவாயில் எதிரில் இரும்பு தூண்களால் ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறுகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடிவிட்டு, பரிகாரத்திற்காக தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை குளத்திலேயே விட்டுவிட்டுச் செல்வர். நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால், பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நளன் குளத்தில் நீராடினர்.பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை, அகற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர். குளத்தில் தண்ணீரை தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.