பதிவு செய்த நாள்
25
ஆக
2014
11:08
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில்,விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும்.கடந்த ஆக.20 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை 9:30க்கு வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவு கற்பகவிநாயகர், மூஷிகம், சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம் வாகனங்களில் வீதி உலா வந்தார். இன்று யானை வாகனத்தில், வில், அம்பு ஏந்தி திருவீதி உலா வருவார். யானை முகத்துடன் எழுந்தருளும் விநாயகர், அசூரனை வதம் செய்யும், கஜமுகசூரசம்ஹாரம், இன்று மாலை 6 மணிக்கு நடக்கும். ஆக.28ல் தேரோட்டம், 29 தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.
தொடர்புடைய கோயில்கள் :