Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறை நீங்கணுமா? நிறைய படையுங்க! தடை நீக்கும் ஸ்லோகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆரோக்கியம் தரும் அருகம்புல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

கதைகள் மூலம் கருத்துக்களைச் சொல்வதில்வல்லவர்கள் நம் முன்னோர். அதில்ஒரு கதையை மட்டும் படித்து விட்டு பிறகருத்தை அறியலாம்.எமனுடைய பிள்ளை அனலன். பிறர் அறியாமலே அவர்களின் உடம்பில் புகுந்து அப்படியே உருக்கி, உடலிலுள்ள சத்தினை உண்டு விடுவான். ஏராளமானவர்களை எமனின் வாசலுக்கு அனுப்பிய அனலன்,தேவலோகம் சென்றான். தேவர்கள் நடுங்கினார்கள்.விநாயகா! வாமன ரூபா! காப்பாற்று! காப்பாற்று! என்று கதறினார்கள். அதற்குபதில் அளிப்பது போல்,அஞ்சாதீர்கள்! என்று குரல் கொடுத்தபடி விநாயகப்பெருமானும் எழுந்தருளினார்.அவர் பின்னால் தேவர்கள் எல்லாரும் ஓடிப்போய், மறைந்து கொள்ள முயன்றார்கள்.அதற்குள் அங்வந்த அனலன், தேவர்களின் முன்னால் நின்ற விநாயகரைப் பார்த்தான்.விநாயகரோ, அனலா! என் வயிற்றில் ஏராளமான உலகங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒரு கை பார்! என்று சொல்லி அனலனைத் துதிக்கையால் வாரிவிழுங்கினார்.விநாயகர் வயிற்றில் அனலன் புகுந்ததும், அனைவரின் வயிற்றிலும் அக்னி எரிந்தது. அதாவது அனைவருக்கும் கடும் கொதிப்பு உண்டானது.தேவர்கள் திகைத்தனர். உடனடியாக விநாயகரின் திருமேனியைக் குளிர்விக்க என்ன வழி என ஆராய்ந்தனர். அதன் பலனாக...சந்திரன், தன் அமுதமயமான ஒளிக்கதிர்களை விநாயகர் மீது மழையாகப் பொழிந்தான். பாம்புகள் குளிர்ச்சியானவை என்பதால், அவற்றை அவர் உடம்பில் சுற்றினார்கள்.என்ன செய்தும் பலனில்லை. அப்போது அங்குவந்தமுனிவர்கள் ஆளுக்கு21 அருகம்புற்களைவிநாயகருக்குசாத்தினர்.உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது. அதே நேரம் மற்றவர்களுக்கும் வெப்பம் நீங்கி குளிர்ச்சி உண்டானது.அன்று முதல் பால், தயிர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தாலும், அறுகம்புல் அர்ச்சனையையும் ஏற்ற விநாயகர், கால அனலப் பிரசமர் என்றும் பால சந்திரப் பிரசமர் என்றும் பெயர் பெற்றார்.ஜபம், தவம், யோகம்என்று செய்யும் போது உடம்பெல்லாம் சூடு பரவும். அந்த சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரிலே மூழ்குவது- மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றால்சூடு தணிவதுடன் தவசக்தியும் இறங்கி விடும். பக்கவிளைவும் கூட உண்டாகலாம். அதெல்லாம் இல்லாமல் உடல் கொதிப்பில் இருந்துவிடுபடவும், ஆரோக்கியம் பெறவும் அருகம்புல் கஷாயம், அருகம்புல் ஜூஸ் என்றெல்லாம் இன்று சொல்வதை புராணத்தில்கதை வாயிலாக கருத்தாக சொல்லியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் ஆனைமுகப் பெருமானான விநாயகருக்குநறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து, அருகம்புல்லால் அர்ச்சிப்பது மிகவும் நல்லது.ஆனைமுகத்தான் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar