பதிவு செய்த நாள்
27
ஆக
2014
12:08
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில், ஆதிதிருவரங்கம் ரங்கநாதன் கோவில்களில், ஆந்திரா கவர்னர் நரசிம்மன், சுவாமி தரிசனம் செய்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, நரசிம்மன் ஆதி திருவரங்கம் வந்தார். ஆதிதிருவரங்கம் கோவில் பட்டாச்சாரியார்கள் மாலையணிவித்து, கோவிலுக்கு அழைத்து சென்றனர். 20 நிமிடத்தில் சுவாமி தரிசனம் முடித்து, திருக்கோவிலுார் புறப்பட்டார்.காலை, 9:00 மணிக்கு, திருவிக்ரமன் சன்னதிக்கு வந்த கவர்னரை கோவில் நிர்வாகம் சார்பில் பட்டாச்சாரியார்கள், பூர்ண கும்ப மரியாதையுடன் அழைத்துச் சென்றனர்.தாயார் சன்னதி, பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் சால்வை அணிவித்தார்.