நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாள் விழாவான நேற்று கலிவேட்டை என்ற முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முந்திரி கிணற்றின்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செப்டம்பர் ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.