நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, பல்வகை நிவேத்யம் போன்றவை நடைபெற்றது. தக்கலை பெருமாள் கோயிலில் இருந்து சமயவகுப்பு மாணவ மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு கேரளபுரம் அதிசய விநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் நடத்திய பின்னர் மீண்டும் பெருமாள் கோயிலை வந்தடைந்தது. இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா போன்ற இயக்கங்கள் சார்பில் 4500-க்கும் மேற்பட்ட சிலைகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 5,6,7 ஆகிய தேதிகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.