பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் சிவலிங்க புரத்தில் நேற்று, சதுர்த்தியில் நடந்தது. இதற்காக, கடந்த புதன்கிழமை மாலை, யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம், புதிய சிலை கரிக்கோலம் வந்தது. நேற்று காலை 7:00 மணியளவில், யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. மங்கள வாத்தியங்கள் முழங்க, 8:30 மணியளவில், கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிலைக்கும் கலசநீர் ஊற்றி, அபிஷேகம் நடந்தது. பின், மகா அபிஷேகமும் செய்யப்பட்டது. மாலை 6:00 மணியளவில், உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.