வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீகந்தப்ப ஆதீனம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குலசேகரன்கோட்டை கிராமக்கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.