பதிவு செய்த நாள்
09
செப்
2014
01:09
உடுமலை : உடுமலை அற்புத அன்னை ஆலயத் தேர்த்திருவிழா, வரும் 14ல் நடக்கிறது; இதற்கான கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது.உடுமலை, தளி ரோட்டில் அமைந்துள்ளது அருள் நிறை அற்புத அன்னை ஆலயம். ஆலயத்தின் தேர்த்திருவிழா, கொடியேற்றம் நேற்றுமுன்தினம் காலை நடந்தது. இதைதொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை, தினமும் மாலை 6.00 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடக்கிறது. 14ம் தேதி காலை 8.00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் தலைமையில், கூட்டு பாடற்பலி, வேண்டுதல் தேர் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு, மடத்துக்குளம் பங்குத்தந்தை மரிய அந்தோணிராஜ் தலைமையில் கூட்டு பாடற்பலி நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, அற்புத அன்னையின் அலங்காரத் தேர் பவனி நடக்கிறது.