பதிவு செய்த நாள்
09
செப்
2014
01:09
கீழக்கரை : திருப்புல்லாணி அருகே பத்திராதரவையில், தர்மமுனீஸ்வரர், கருப்பணசுவாமி, லாடசன்னாசி, ராக்காச்சி அம்மன் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்., 6 அன்று முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. அதனை தொடர்ந்து நவக்கிரக, மிருத்யஞ்ச ஹோமங்கள், பூர்ணாகுதி, அஷ்டபந்தனம் முதலியவற்றுடன் கோ, கன்னிகா, சுமங்கலி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஜவகர் ராமசாமி அய்யங்கார் தலைமையில் வேதமங்திரங்கள் முழங்க புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது. விழாக்குழு நிர்வாகிகள் வேலு, லோகநாதன், சீராளன், துரைராஜ், ராமகிருஷ்ணன், ராஜமுனியாண்டி, கோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.