பதிவு செய்த நாள்
10
செப்
2014
12:09
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன், செல்லியம்மன், அக்கரைப்பட்டி முனியப்பன், விருந்தாடியம்மன், காட்றாயப்பசாமி, கோலாட்டம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, 8ம் தேதி காலை, 5 மணிக்கு புற்றுமண் எடுத்தல், 6 மணிக்கு, கங்கை பூஜை, சக்தி கரகம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு ராஜஅவதாரம் செய்யப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு சக்திகரகம் எடுத்து வந்து பூ மிதித்தல், காலை, 11 மணிக்கு, கூழ்ஊற்றுதல், இரவு, 7.30 மணிக்கு, மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இதனை முன்னிட்டு, கருமாரியம்மன் அவதார அலங்கார காட்சியும், உற்சவ திருவீதி உலா, சிறப்பு வாத்தியங்களுடன், வாணவேடிக்கையும் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு, அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்தல், மதியம், 3 மணிக்கு காட்றாயப்பசாமிக்கு, கோலாட்டமனுக்கு மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு, சிவசக்தி அலங்காரத்தில், பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்க உள்ளார். நாளை காலை, 9 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு எடுத்தல், வானவேடிக்கையும், மதியம், 4 மணிக்கு செல்லியம்மனுக்கு, பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. 12ம் தேதி காலை, 8 மணிக்கு மாரியம்மனுக்கு, பொங்கல் வைத்தலும், மாலை, 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும், இரவு, 8 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 13ம் தேதி, காலை, 4 மணிக்கு சக்தி முனியப்பன் கோவிலில் இருந்து பந்தகாசி ஊர்வலமும், காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், 14ம் தேதி காலை, 9 மணிக்கு, கொடி இறக்குதலும், 7 மணிக்கு கும்ப பூஜையும் நடக்கிறது. விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.