கீழக்கரை : ஏர்வாடி வெட்டன்மனையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,11 அன்று முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், பூர்ணாகுதி, அஷ்டபந்தனம் முதலிய பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.