நத்தம் : செந்துறை பெரியூர்பட்டி பெரிய முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் முதற்கால யாக பூஜை துவங்கியது. முளைப் பாரி, புண்ணிய தீர்த்தக் கலசங்கள் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டன. கோ யில் கோபுர கலசத்தில் புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.