மண்ணச்சநல்லூர் : மண்ணச்சநல்லூர் தாலுகா, சா.அய்யம்பாளையத்தில் உள்ள அய்யனார் மற்றும் பரிவார தேவதை கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சா.அய்யம்பாளையத்தில் உள்ள அய்யனார் மற்றும் பரிவார தேவதை கோவில்கள் கிராம மக்களால் திருப்பணி செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கிராம மக்களால் கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, மாலை 4 மணியளவில் யாகசாலை பூஜைகள் விநாயகள் வழிபாட்டுடன் துவங்கியது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை மகா கும்பாபிஷேகமும், கோ பூஜை, சிறப்பு பூஜையும் நடந்தது. கும்பாபிஷேகத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கிலான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.