பதிவு செய்த நாள்
17
செப்
2014
01:09
திருத்தணி : கொள்ளாபுரி அம்மன் கோவிலில், நேற்று நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கொள்ளாபுரி அம்மன் கோவிலில், நேற்று, 22ம் ஆண்டு, ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல், 12:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மதியம், 2:00 மணிக்கு வசந்த உற்சவம், கரகம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.