பதிவு செய்த நாள்
24
செப்
2014
12:09
புதுச்சேரி: கருவடிக்குப்பம், ஓம்சக்தி நகரிலுள்ள கோமாதா கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஹாளய பட்சம் ஆரம்பத்திலிருந்து (கடந்த 9ம் தேதி), மஹாளய அமாவாசை முடிய உள்ள 15 நாட்கள் (23ம் தேதி வரை) வரை, மஹாளய பட்ச புண்ணிய நாட்களாகும். இந்த நாட்களில், கோமாதா கோவிலில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மஹாளய அமாவாசை நிறைவு நாளான நேற்று, ÷ காமாதா கோவிலில் காலை 5.00 மணிக்கு கோ பூஜை நடந்தது. காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை ராஜா சாஸ்திரி தலைமையில், முன்னோர்களான பித்ருகளுக்கு தில தர்ப்பம் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ராஜா சாஸ்திரிகள், பிராமண சங்கத் தலைவர் கல்யாணம், உப தலைவர் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.