திருவந்திபுரம் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.13 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2014 12:09
கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 481 ரூபாய் வசூலானது. கடலூர் அடுத்த திருவந் திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில், உண்டியல் நேற்று காலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப்பணியில் வங்கிப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் 45 ஈடுபட்டனர். உண்டி யலில் 13 லட்சத்து 39 ஆயிரத்து 481 ரூபாய் ரொக்கம், 254 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் 14 ஆகியவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியின் போது, கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், ஆய்வாளர் கோவிந்தசாமி உடனிருந்தார்.