பதிவு செய்த நாள்
24
செப்
2014
12:09
அச்சிறுபாக்கம்: பாபுராயன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஜயவரதராஜ பெருமாள் கோவில், பாழடைந்து வருகிறது. அச்சிறுபாக்கத்தில் இருந்து, 14 கி.மீ., தொலைவில், ஒரத்தி செல்லும் சாலையில் அமைந்து உள்ளது. பாபுராயன்பேட்டை கிராமம். இங்கு கி.பி.,16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, விஜயவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை, பக்தர்கள், பூலோக வைகுண்டம் என, அழைக்கின்றனர். காஞ்சி வரதராஜர் கோவிலை விட பரப்பளவில் பெரிய இந்த கோவில், முறைய õன பராமரிப்பின்றி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில், தற்போது, 152 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலத்தை தனிநபர்கள், ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவிலில், ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பகுதிவாசிகளும் பக்தர்களும், அறநிலைய துறைக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.