பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
திருத்தணி : திருத்தணி, பழைய பஜார் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், 22ம் ஆண்டு நவராத்திரி விழா துவங்குகிறது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.வரும், 26ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, குத்து விளக்கு பூஜையும், 28ம் தேதி மதியம், அன்னதானம், அக்., 3ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகமும், 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து, தினமும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.