பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
கடம்பத்துார் : கடம்பத்துார், திரிபுர சுந்தரி முத்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி, இன்று தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. கடம்பத்துாரில் உள்ள திரிபுரசுந்தரி முத்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, இன்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்குகிறது.அதன்பின், மாலை 6:30 மணிக்கு, சுவாமிக்கு மஞ்சள் காப்பு நடைபெறும். மேலும், நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமிக்கு, குங்குமம், சந்தனம், வெள்ளி, வெற்றிலை போன்ற ஒன்பது வகை காப்புகளில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.அதன்பின், தினமும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும். நவராத்திரி விழா, வரும் 2ம் தேதி நிறைவு பெறும்.