விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சிவஞானம், செயல் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலையில் காலை 11:00 மணியளவில் எட்டு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில், 12 லட்சத்து 11 ஆயிரத்து 535 ரொக்கம், 56 கிராம் தங்கம், 628 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர் நோட்டுகள் 10 ஆகியவை இருந்தன. கடந்த ஜூன் மாதம் உண்டியல் எண்ணப்பட்டபோது, 11 லட்சத்து 55 ஆயிரத்து 671 ரூபாய் காணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.