நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. காலையில் சிறப்பு அவிஷேகமும், அம்மாள் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷோகம், பஜனை. கச்சேரி, அன்னதானம் மற்றும் அம்மன் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை பவனிவருதல் ஆகியவை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம் 3-ம் தேதி வெள்ளிக்குதிரையில் அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் சோணச்சலம் தலைமை கணக்கர் ராஜேந்திரர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.