ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பிரம்மா மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். இவர் பழமையான ஒரு வன்னி மரத்தின் அடியில் இருக்கிறார். இம்மரத்தை அவரது நான்காவது முகமாக பாவித்து வணங்குகிறார்கள். சித்தலமான இங்கு வீரநாராயணப் பெருமாளுக்கும் சன்னதி இருக்கிறது. மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசனம் செய்வது விசேஷம் என்பதால், இங்கு வந்து வணங்குவோருக்கு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.